காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 60 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 600க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களில் 60ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

Update: 2021-09-12 14:30 GMT

அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர்.

.தமிழகத்தில் கொரோனா நோயைத் தடுப்பதற்காக மெகா தடுப்பூசி முகாம் அரசால் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி  நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகராட்சியில், ஒவ்வொரு வட்டாரத்திலும் முறையே 100 முகாம்கள் நடைபெற்றன. ஒவ்வொரு முகாம்களிலும் தடுப்பூசியை போடுவதற்காக அனைத்து துறை சார்ந்த  பணியாளர்கள் தடுப்பூசி பணியை ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.

இந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி இலக்கு 29,246. ஆனால் தடுப்பூசி செலுத்திய நபர்களின் எண்ணிக்கை 60,040 ஆகும்

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாடு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பின் மூலம் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால். இலக்கை தாண்டி தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News