அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக 50ஆயிரத்தில் வெந்நீர் பந்தல்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக வெந்நீர் குழாய் பந்தல் தனியார் தொண்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-11 04:00 GMT

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக சுடு நீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு 40க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் அறுவை சிகிச்சை, மகப்பேறு  உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்காக ஆயிரத்துக்கும் மேற்கொண்டு உள்நோயாளிகளாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அனைத்து பொதுமக்களையும் குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தி உளளது. மேலும் வகுப்பில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பேறு பெற்றாள் ஒரு வார காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும், முதியவர்கள் உட்பட அனைவரும் விண்ணில் அருந்தும் நிலையில் போதிய வசதி அரசு மருத்துவமனையில் இல்லாததால் அருகில் உள்ள டீக்கடைகளில் சுடுநீர் பெற்று அருந்தி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள பசுமை புரட்சி அமைப்பினர் இந்நிலையைப் போக்கிட ரூபாய் 50 ஆயிரம் செலவில் மகப்பேறு மருத்துவமனை பிரிவு அருகே நான்கு குழாய்கள் கொண்ட சுடுநீர் தொட்டி அமைத்தனர்.

அரசு மருத்துவமனை அளிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இரண்டு ஹீட்டர் கருவிகள்அமைக்கபட்டு அதன் மூலம் நோயாளிகள் தூய்மையான வெந்நீர் நேற்றுமுதல் பெற்று வருகின்றனர்.

இந்த அமைப்பின் செயலை நோயாளிகள்,  சமூக ஆர்வலர்கள்,  மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Tags:    

Similar News