காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-03 19:30 GMT

விபத்தில் உயிரிழந்தவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ராமஜெயம், தனது சித்தப்பா மகன் ராஜேஷ் உடன் சென்னைக்கு வந்து, மாமனார் வீட்டில் பிரசவத்திற்கு வந்து தங்கி இருந்த தனது மனைவி ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை ராமஜெயம்  காரில் அழைத்துக் கொண்டு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி சாலை ஓரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது ராமஜெயம் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் கார் முழுவதும் நசுங்கிய நிலையில் ராமஜெயத்தின் மனைவி ரத்னா, மற்றும் 3 குழந்தைகள் சகோதரர் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

காரை ஓட்டி வந்த ராமஜெயம் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாலு செட்டி சத்திரம் போலீசார் உயிரிழந்த ஐந்து பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News