100 கோடி தடுப்பூசி சாதனை: மூவர்ணத்தில் ஜொலிக்கும் காஞ்சி கைலாசநாதர் கோவில்

75வது சுதந்திர தின விழா மற்றும் 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டவுள்ளதையொட்டி காஞ்சி கைலாசநாதர் காேவிலில் மூவர்ண விளக்கு ஓளி.

Update: 2021-10-16 05:30 GMT

 மூவர்ண நிறத்தில் வண்ண விளக்கொளி‌யில் காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில்.

75வது சுதந்திர தின விழாவினை போற்றும் வகையிலும்,  இந்தியாவில் 97 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வரும் 18 அல்லது 19ம்தேதியில் 100 கோடி டோஸ் என்ற சாதனையை இந்தியா எட்டவுள்ளது.

இதையொட்டியும் நாடு முழுவதும் தொல்லியல் துறை சார்பில் 100 பாரம்பரிய சின்னங்களில் தேசிய கொடியின் நிறங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரத சிற்பங்கள், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ,  கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில், வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதுச்சேரி மூலநாதசுவாமி கோயில் செஞ்சி கோட்டை ஆகியவை தேசியக்கொடி நிறங்களில் ஜொலி ஜொலித்தது.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் மூவர்ண விளக்கு ஒளியில் காண்பதற்கு ரம்மியமான முறையில் இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் புகைபடம்‌  எடுத்தும், ரசித்துப் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tags:    

Similar News