முதல்வர் நிவாரண நிதிக்கு பள்ளி மாணவி ரூ.3 ஆயிரம் நிதியளிப்பு

இலங்கையில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு உணவு , மருந்து உள்ளிட்ட பொருட்கள் அளிக்க தாராள நிதி உதவி அளிக்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-09 06:15 GMT

மாவட்ட ஆட்சியரிடம் இலங்கைக்கு ரூ.3 ஆயிரம் நிதியளித்த பள்ளி மாணவி ச.லஷ்மிபிரியா.

இலங்கையில் ஏற்படுட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவி செய்ய அனைத்து உதவிகளும் தமிழகம்  சார்பாக அனைத்து உதவிகளும்  செய்யபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்கள் தாரளமாக நிதியுதவி அளிக்க கோரிக்கை வைத்தார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம்‌, வாலாஜாபாத்தில் நகரில் வசிப்பவர் சங்கர். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் வாலாஜாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வரும் ச.லஷ்மிபிரியா தனது சேமிப்பு நிதியிலிருந்து ரூ3ஆயிரத்தை  எடுத்து காசோசலையாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் தனது பெற்றோர் உதவியுடன் வழங்கினார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோர் கூறுகையில், முதல்வரின் கோரிக்கையை தொலைகாட்சியில் பார்த்ததிலிருந்து சிறுமி விருப்பம்  தெரிவித்தனர். அதன்பேரில் இதை அவள் இன்று மகிழ்ச்சியுடன் அளித்துள்ளார்.

Similar News