சிறப்பு சாலைகள் அமைப்பதற்கு பூமி பூஜை

Update: 2021-02-25 11:30 GMT

காஞ்சிபுரத்தில் சிறப்பு சாலைகள் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் தமிழக அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அபிவிருத்தி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட நீண்ட நாட்களாக சேதமான நிலையில் இருந்த சதாவரம் சாலை உட்பட சுமார் 11.843 கிலோ மீட்டர் நீளமுள்ள 41 சாலைகள் ரூ 6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது.சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டப் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பூமி பூஜை செய்து இன்று தொடங்கி வைத்தார். பூமிபூஜை விழாவில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, செயற்பொறியாளர் ஆனந்தஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News