ராமர் ஆலய பணிக்கு நன்கொடை வழங்க ஏற்பாடு

Update: 2021-01-30 11:00 GMT

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்க காஞ்சிபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அனைவரும் தங்களால் இயன்ற பங்களிக்க வேண்டும் எனவும் , தசரதன் காஞ்சிக்கு வந்து பூஜை செய்த பின் ராமர் அவதரித்தார் என்பதால் அயோத்திக்கும் காஞ்சிக்கும் உள்ள உறவை போற்றவும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் காஞ்சி சங்கரமடம் புதிய முயற்சி எடுத்துள்ளது குறித்து செய்தியாளர் கூட்டம் மடம் மேலாளர் சுந்தரேச ஐயர் தலைமையில் சங்கரமடத்தில் நடைபெற்றது.

பக்தர்கள், பொதுமக்கள் வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்களுடைய காணிக்கைகளை செலுத்த சங்கரமடத்தில் சிறப்பு உண்டியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொது மக்கள் மூலம் சேர்ந்த காணிக்கைகளை அன்றைய தினம் மாலையில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமான பணி பொறுப்பில் உள்ளவர்களிடம் வழங்கப்படும் என சங்கரமடம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News