கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-24 00:00 GMT

கலெக்டர் ஸ்ரீதர் 

கள்ளக்குறிச்சியில்,  18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிளுக்கு,  மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமை, ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். முகாமில், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச இயலாதவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் எலும்பு குறைபாடுடையவர்கள் என மொத்தம் 83 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு,  மருத்துவக்குழுவினர் மூலம் ஊனத்தின் தன்மை மற்றும் வயது சான்று குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News