வெள்ளம் சூழ்ந்த திருநாவலூர் மாணவியர் விடுதி: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

திருநாவலூர் மாணவியர் விடுதியில் வெள்ளம் சூழ்ந்தது குறித்து ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-11-21 11:02 GMT

திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த மாணவியர் விடுதி.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி, உண்டு உறைவிடப்பள்ளி மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது. தகவலறிந்து வந்த திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இடுப்பளவிற்கு மேலாக கட்டிடத்திற்குள் தண்ணிர் புகுந்ததால் மாணவியர் விடுதி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களை காவலாளி ஆசிரியர்களின் துணையோடு பத்திரமாக மீட்கப்பட்டு பள்ளி வளாகத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

ஒன்றிய  குழு தலைவர் இளங்கோவன் மாணவர்களுக்கு டீ ,பிஸ்கட்,ரஸ்க் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி ஆசிரியர்களிடையே அவர்களின் நிலைகளை கேட்டறிந்து நீர் வெளியேற்றப்படும் வரையில் மாணவர்களை அவர்களின் பெற்றோர்களை வரவைத்து ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.

பசியில் தவித்த உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் நிலையை அறிந்து உதவி புரிந்து ஒன்றியக்குழு பெருந்தலைவர் சாந்திஇளங்கோவன் அவர்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News