சங்கராபுரம் தீவிபத்து சம்பவம்: பட்டாசுக் கடை உரிமம் தற்காலிக ரத்து

சங்கராபுரம் பட்டாசு கடை விற்பனைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-30 12:05 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணபதி, 47; இவரது கடையில் பட்டாசு விற்பனைக்கு நிரந்தர உரிமம் பெற்றிருந்தார்.

வரும் 2022ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி வரை உரிமம் புதுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26 ம் தேதி பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சுற்று வட்டார பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்தன. கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான வெடிபொருட்களை வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

இதனையடுத்து, செல்வகணபதியின் சில்லரை பட்டாசு கடை விற்பனைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News