கள்ளகுறிச்சியில் தூய்மை பணியாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களை சந்தித்த தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன்

Update: 2021-08-28 13:41 GMT

பசுங்காய் மங்கலம் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளில் ஆணையத்தின் தலைவர் மற்றும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கூட்டரங்கில் நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் சலுகைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தூய்மை  பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் எம் .வெங்கடேசன்  தலைமையில்  நடைபெற்றது.

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பசுங்காய் மங்கலம் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளில் ஆணையத்தின் தலைவர் மற்றும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அங்கு குடியிருப்பவர்கள் இடம் குடிநீர் கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்து பழமைவாய்ந்த குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு தேவையான திட்ட அறிக்கைகளை தயார் செய்து தொடர்புடைய துறை செயலாளருக்கு உடனடியாக பரிந்துரை செய்திட அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகள், அனைத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு குறித்த காலத்திற்குள் காலதாமதமின்றி ஊதியம் வழங்கிடவும் ஊதிய பட்டியலின் நகலை மாதந்தோறும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிடவும் ஊதிய பட்டியலின் நகல் இணைத்து பணியாளர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது

.மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு ESI உறுப்பினர் அட்டை உடனடியாக வழங்கிடவும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அனைத்து சலுகைகளுக்கு பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் தேசிய ஆணையத்தின் தலைவருக்கு  ரக்ஷாபந்தன் கயிறு கட்டினர்.

Tags:    

Similar News