சின்னசேலம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட இயக்குநர் ஆய்வு

சின்னசேலம் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் ஆய்வுப் பணி நடந்தது.

Update: 2021-11-14 08:42 GMT

சின்னசேலம் பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சித்துறை மூலம் தனிநபர் கிணறு, மழைநீர் வடிகால் அமைத்தல், சாலை வசதி, தெருவிளக்கு, பசுமை வீடு உட்பட பல்வேறு பணிகள் நடக்கிறது.

இப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தரமாகவும், விரைந்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, பி.டி.ஓ., துரைசாமி, செயற்பொறியாளர் தனபால், ஊராட்சித் தலைவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News