கள்ளக்குறிச்சியில் ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

Update: 2021-12-26 04:45 GMT

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம். 

கள்ளக்குறிச்சியில் காவல்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் பாரதி வரவேற்றார்.

கூட்டத்தில், சில குற்றசெயல்களில் சம்மந்தப்பட்ட நபர்களை பிடிப்பதிலும், அவசர தேவைக்கு உதவுவதிலும் காவல்துறைக்கு ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்கின்றனர். தற்போது நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும் உங்களது பங்கு இருக்க வேண்டும்.

ஆட்டோவில் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. நகரில் சாலைகளில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. ஸ்டாண்டுகளில் மட்டுமே நிறுத்தி ஏற்ற வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என டி.எஸ்.பி., ராஜலட்சுமி அறிவுறுத்தினார்.

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி, மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் வேலுமணி, பொருளாளர் சையத்சர்தார், நகர தலைமை ஆட்டோ சங்க தலைவர் மணிகண்டன் உட்பட அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள், போலீசார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News