கள்ளக்குறிச்சி அரசு பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்ற 72 மாணவ, மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2021-11-03 13:15 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற, 154 மாணவர்கள், 282 மாணவிகள் என மொத்தம் 436 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். நேற்று முன்தினம் மாலை, தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 24 மாணவர்கள், 48 மாணவிகள் என, 72 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

அரசு பள்ளி அளவில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ணவேணி 292 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், மாணவி சுகந்தி 251 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தை பெற்றுள்ளனர். நைனார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுஜி, 277 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களையும், மாணவிகளே பிடித்து சாதனை படைத்துள்ளனர். கடந்த 2019-2020ம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 25 பேர், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News