கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து குறைவு

கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

Update: 2021-11-05 12:44 GMT
பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை தாலுகாவில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.

குறைந்த விலைக்கு தனியார், இடைத்தரகர்களிடம் பொருட்களை விற்பது தவிர்க்கப்படுவதால், மார்க்கெட் கமிட்டிக்கு, விவசாயிகள் அதிகளவில் விளை பொருட்கள் எடுத்து வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி கமிட்டியில் அறுவடை கால மொத்த விற்பனை 60 அல்லது 70 கோடி ரூபாயைக் கடந்து நடைபெறும். இந்த ஆண்டிற்கான அறுவடை பருவ காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் ஓரளவிற்கு பயிர் வரத்து தற்போது வரை நீடித்துள்ளது.

கடந்த உள்ளாட்சித் தேர்தல் வரை விளைபொருட்களின் வரத்து அதிகமாக இருந்த நிலையில், சில தினங்களாக மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த அறுவடை காலம் 4 மாத இடைவெளிக்குப் பின் ஜனவரி முதல் துவங்கிடும். உளுந்து பயிர் வரத்து மூலம் வணிகம் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கும். மார்ச் முதல் எள் வரத்து துவங்கி, படிப்படியாக விளைபொருட்களின் வரத்து அதிகரிக்கும்.

இதற்கிடையே மக்காச்சோளம் பயிர் விளைச்சல் அதிகரித்து வியாபாரம் முழுவீச்சில் நடைபெறும் என கள்ளக்குறிச்சி மார்க்கொட் கமிட்டி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News