முழு கொள்ளளவை எட்டிய மணிமுக்தா அணையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

அணையில் இருந்து விநாடிக்கு 7,042 கன அடி தண்ணீர் புதிய ஷட்டர் வழியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது

Update: 2021-11-21 15:15 GMT

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையினை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி  அருகேயுள்ள சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையினை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

தொடர்மழையினால் கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள 36 அடி உயர கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை நிரம்பியுள்ளது. தொடர் நீர்வரத்துஅணையில் இருந்து விநாடிக்கு 7,042 கன அடி தண்ணீர் புதிய ஷட்டர் வழியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது .அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் மணிமுக்தா ஆற்றின் கரைபகுதியை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மணிமுக்தா அணையினை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பதிவேட்டினை பார்வையிட்டு, அணைக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, தண்ணீரின் அளவை எவ்வாறு கணக்கிடுகிறீர்கள், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதா, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து  அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். ஆய்வின் போது திட்ட இயக்குநர் மணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News