சின்னசேலம் வாரச்சந்தை வளாகத்தில் சுகாதார சீர்கேடு: வியாபாரிகள் அவதி

சின்னசேலம் வாரச் சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர் கதையாகி வருவதால் வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-11-19 03:27 GMT

வாரச்சந்தை பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நகர பகுதியில் பாண்டியன்குப்பம் செல்லும் சாலை அருகே மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வார சந்தை இயங்கி வருகிறது. வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தையில், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வர். விலை குறைவாக இருக்கும் என்பதால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவர். மழை பெய்தால் சந்தை பகுதிகளில் மழைநீர் தேங்கி, வியாபாரம் பாதிப்பது பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், சந்தையின் ஒரு புறத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் மழைநீரோடு சேர்ந்துள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே சந்தையை சீரமைத்து குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் செல்வதைத் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News