டிஆர்ஓ விஜய் பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் டிஆர்ஓ விஜய் பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-27 15:15 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று டிஆர்ஓ மனுக்களைப் பெற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வீட்டுமனை பட்டா கோருதல்,  விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல் தொழில் தொடங்க கடன் உதவி  கோருதல்,  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மனுக்கள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்து மனுக்கள்  மீதான நடவடிக்கைகள் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு நோய் தொற்றுகளில் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.  இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகளிடம் 27 மற்றும் பொதுமக்களிடம் 329 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனித்துணை ஆட்சியர் திருமதி ராஜமணி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News