கள்ளக்குறிச்சியில் அலங்கார ஊர்தி: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

உளுந்துார்பேட்டையில் வரும் 14ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-02-10 15:56 GMT

ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தி உளுந்துார்பேட்டையில் காட்சிபடுத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை பெருமைபடுத்தும் விதமாக, அவர்களது உருவசிலைகள் அடங்கிய மூன்று அலங்கார ஊர்திகள் தமிழக அரசு சார்பில் வடிவமைக்கப்பட்டது. இவை சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற நிலையில், தமிழகம் முழுவதும் அலங்கார ஊர்திகள் காட்சிபடுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதில், இரண்டு அலங்கார ஊர்திகள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் வரும் 14ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களுக்கு சிரமமின்றியும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ)சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் உட்பட காவல்துறை, வருவாய்துறை, நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News