திருக்கோவிலூர் நகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கல்லூரி மாணவி போட்டி

நகர்பபுற உள்ளாட்சி தேர்தலில் திருக்கோவிலுார் நகராட்சியில் 125 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2022-02-07 17:45 GMT

பிரீத்தி.

திருக்கோவிலுார் நகராட்சித் தேர்தலில் 21 வயது கல்லுாரி மாணவி மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடுகிறார். நகர்பபுற உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் நகராட்சிக்கான வேட்புமனுவை 125 பேர் தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. எஞ்சியிருக்கும் 123 பேரில் 8வது வார்டில் பிரீத்தி, 21; பி.காம்., பட்டதாரியான இவர் தற்போது சி.ஏ., பயிற்சி வகுப்பில் படித்து வருகின்றார். பட்டதாரி மாணவியான இவர் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் நகராட்சியில் குறைந்த வயதுடைய பட்டதாரி பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிதிராவிடருக்கு  ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த வார்டில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., வேட்பாளர்களை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளார். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று என்பதால் இறுதிப் போட்டியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரிந்த பிறகே பிரசாரம் சூடுபிடிக்கும்.

Tags:    

Similar News