சின்னசேலம் பேரூராட்சியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

சின்னசேலம் பேரூராட்சியில் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-06 16:04 GMT

சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தையும் ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 23 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.

இதில் 4 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இம்மையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தையும் ஆய்வு செய்தார். தேர்தல் வட்டார மேற்பார்வையாளர் சிவக்கொழுந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, தாசில்தார் அனந்தசயனன் உடனிருந்தனர்.

Tags:    

Similar News