கொரட்டூர் கிராமத்தில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றம்

உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூர் கிராமத்தின் தெருக்களில் தேங்கிய தண்ணீரை கால்வாய் தோண்டி அகற்றப்பட்டது.

Update: 2021-11-12 15:29 GMT

தேங்கிய தண்ணீரை அகற்ற ஜேசிபி மூலம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அணைகள், ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழைக்கு பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூர் கிராமத்தின் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து, தேங்கியிருந்த தண்ணீரை ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஜே.சி.பி மூலமாக தெருக்களில் தேங்கி இருந்த தண்ணீரை கால்வாய்கள் தோண்டி தண்ணீர் அப்புறப்படுத்தினர்.

Tags:    

Similar News