அகில இந்திய தொழில் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2021-11-15 12:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி : கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு: ஐ.டி.ஐ.,யில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள். திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற (சி.ஓ.இ., - என்.டி.சி.,) பயிற்சியாளர்கள் ஒரு ஆண்டு அனுபவம் உள்ளவர்கள். எஸ்.சி.வி.டி., தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் ஆகியோர் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை. ஆகஸ்ட் 2019ம் ஆண்டில் எஸ்.சி.வி.டி., திட்டத்தின்கீழ் சேர்க்கை பெற்ற பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பித்து என்.டி.சி. பெறலாம். முதல்நிலை கருத்தியல் தேர்வு வரும் டிசம்பர் 14ம் தேதியும், செய்முறை தேர்வு 15ம் தேதியும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளது.

தேர்ச்சி பெற்றவர்கள் 2022ல் ஜூன் மாதம் நடக்கும் அகில இந்திய தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு எஸ்.சி.வி.டி., டில்லி மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம் மற்றும் தேர்வு குறித்த விபரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை, தேர்வு கட்டணம் 200 ரூபாய்க்கான சலான், கல்விச்சான்றிதழ் நகல் இணைத்து வரும் 22ம் தேதிக்குள் உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வு மைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News