அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-02 12:15 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 -ம் ஆண்டு காலியிடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 18.11.2021 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021ஆம் ஆண்டிற்கான முதல்கட்ட மாவட்ட கலந்தாய்வு 23.08.2021 வரை நடைபெற்றது. பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு காலியிடங்களை பூர்த்தி செய்ய நேரடிச் சேர்க்கைகாக 24.08.2021 முதல் 15.09.2021 மற்றும் 07.10.2021 முதல் 30.10.2021 வரை நீட்டிக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. தற்போது காலியிடங்காள 100 சதவீத நிரப்பிட நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் 18.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அந்தந்த தொழிற்பிரிவுகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் உரிய இன ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்படவுள்ளது. எனவே 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சேர்ந்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விவரங்களுக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்தூர்பேட்டை தொலைபேசி எண். 04149-222339, 9080187127-லும், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம்,.சங்கராபுரம் தொலைபேசி எண்.04151-235258-லும் மற்றும் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சின்னசேலம் தொலைபேசி எண். 9380114610 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகதொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News