அரசு ஐடிஐ.,களில் மாணவர் சேர்க்கை: 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-05 12:50 GMT

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2021ம் ஆண்டிற்கான முதல்கட்ட மாவட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடந்தது. பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, காலியிடங்களை பூர்த்தி செய்ய நேரடி சேர்க்கை அக்டோபர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது காலியிடங்களை 100 சதவீதம் நிரப்பிடும் பொருட்டு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் மீண்டும் வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விபரங்களை www.skilltraining.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். அதேபோல், அரசு தொழிற்சி பயிற்சி நிலைய முதல்வர்கள் உளுந்துார்பேட்டைஎண். 04149-222339, 90801 87127, சங்கராபுரம் 04151-235258, சின்னசேலம் -93801 14610 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News