ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Update: 2021-12-24 18:21 GMT

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், கள்ளகுறிச்சி மாவட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மத்திய அரசு நிதி ஆதரவை போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படைப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பிரீ மெட்ரிக்( ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு )ஆகிய திட்டங்களுக்கு உரிய இணையதளம் 13.12.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி உள்ள பழங்குடியினர் மாணவர்கள் புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று வருமானச் சான்று மதிப்பெண் சான்றிதழ் சேமிப்பு கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் 13.01.2021 ஆண்டுக்குள் இணையதள வழி விண்ணப்பிக்க கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்,கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்த இடமும் மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறும் என்றி பதிவேற்றம் செய்து குறித்த கால கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News