கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 97 மனுக்கள்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 97 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2021-11-08 12:24 GMT

பொதுமக்களிடம் மனுக்களை பெறும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதிர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, ஆதாவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரிகள் பசுமை வீடு திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகள் உடனடியாக விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும், பருவமழையினால் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டுள்ள துறையின் கீழ் உள்ள விபரங்கள் குறித்த தகவல்களை தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்குப் தெரிவித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 7 மனுக்களும், பொது மக்களிடம் 90 மனுக்கள் பெறப்பட்டன.

முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மாவட்ட ஆட்சித்தலைர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News