6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக உயர்வு

ஈரோடு தனியார் மருத்துவமனையில் 560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை தீவிர சிகிச்சையால் 6.50 கிலோவாக உயர்ந்தது.

Update: 2024-06-16 03:15 GMT

560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை 6.50 கிலோவாக உயர்வு.

560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை ஈரோடு சுதா மருத்துவமனையின் தீவிர சிகிச்சையால் 6.50 கிலோவாக உயர்ந்தது.

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா பல துறை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இரட்டை குழந்தைகள் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணுக்கு 6 மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டத்தை அடுத்து, அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தைகள் பிறந்தது.

இதில், இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்தது. மற்றொரு குழந்தை வேறும் 560 கிராம் எடையுடன் பிறந்தது. இதையடுத்து தாய், சேய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், குழந்தைக்கு மட்டும் மூச்சு திணறல் பிரச்சனை இருந்ததால் வெண்டிலேட்டர் மூலமாகவும், ஆக்சிஜன் சிலிண்டர் மூலமாகவும் சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும், 200 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சையும், அதன்மூலம் குழந்தைக்கு தேவையான புரதச்சத்து மற்றும் கொழுப்பு சத்து போன்றவை வழங்கப்பட்டதன் விளைவாக தற்போது குழந்தை 6.50 கிலோ எடையுடனும், மூளை வளர்ச்சியுடன் உள்ளதாக சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரங்கேஷ், கவுரி சங்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News