கள்ளக்குறிச்சியை கண்டு கொள்ளாத ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டு கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளனர்.

Update: 2024-06-23 14:40 GMT

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய  மரண சம்பவங்களை முதல்வர் ஸ்டாலினும், திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கருதப்படுகிறது.

Kallakurichy news, Kallakurichy latest news, Cm Stalin and allied party leadersகள்ளக்குறிச்சியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராய மரண சம்பவங்கள் தமிழ்நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடிப்பது, இதனால் உயிரிழப்பது என்பது தமிழக வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. அப்படி நடக்கும் போதெல்லாம் கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுப்பது போல் சில காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்படும். பின்னர் அவை மறக்கடிக்கப்பட்டு விடும். அது போன்ற நிகழ்வுகள் தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த அடித்தட்டு மக்கள் குறிப்பாக மூட்டை தூக்குவோர் ,கட்டிட தொழிலாளர்கள் போன்றவர்கள் தான் கள்ளசாராயத்தால் அதிக அளவில் உயிரிழந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு சாவுகளில் தொடங்கி இப்பொழுது 55 பேரை கடந்து விட்டது. கொத்துக்கொத்தாக உயிரிழந்ததால் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீர் புரமாக மாறி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் தந்தையை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த மனைவிமார்கள் என உறவுகளை  இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.

Kallakurichy news, Kallakurichy latest news, Cm Stalin and allied party leadersஆனால் எதற்கெடுத்தாலும் அரசியல் பேசும் தலைவர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு மரணத்திலும் அரசியல் தான் செய்கிறார்கள். பொதுவாக ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளுக்கு பலிகடா ஆக்கப்படுவது அதிகாரிகள் தான். அது இந்த கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளிலும் நடந்திருக்கிறது. கள்ளச்சாராய சாவு பற்றிய தகவல் கிடைத்தவுடன் முதல் ஆளாக களத்தில் இறங்கியவர் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவர் கள்ள சாராயத்தால் உயிரிழந்தவர்களின் வீடு தோறும் சென்று ஆறுதல் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நன்றாக சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தனது கடமையை தவறாமல் செய்திருக்கிறார்.

ஆனால் சட்டசபை அன்றைய தினம் தொடங்கியதால் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. அன்றைய தினம் மட்டுமல்ல சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் இன்றுவரை அவர் கள்ளக்குறிச்சியை எட்டிப் பார்க்கவே இல்லை. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி  வழங்கப்படும் என அறிவித்ததோடு ஆற்றொணா துயரத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். இது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகள். அதற்காக முதல்வருக்கு நன்றி சொல்லி தான் ஆக வேண்டும்.

Kallakurichy news, Kallakurichy latest news, Cm Stalin and allied party leadersஅதே நேரத்தில் அவர் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு சென்று நாட்டின் முதல்வர் என்ற  அடிப்படையில் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாதது ஒரு மைனஸ் பாயிண்டாகவே கருதப்பட்டு வருகிறது. முதல்வர் செல்லாதது மட்டுமல்ல எதற்கெடுத்தாலும் குறை சொல்லும், அரசியல் பேசும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சி தலைவர்களும் கள்ளக்குறிச்சியை இன்று வரை எட்டிப் பார்க்கவில்லை கண்டு கொள்ளவும் இல்லை. பத்திரிகைகளில் அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு சைலன்ட் ஆகிவிட்டார்கள்.

ஆளுங்கட்சி தரப்பில் முதல்வர் செல்லவில்லை என்றாலும் அவரது  மகனாகிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் எல்லாம் திமுகவிற்கு ஆதரவாக தான் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர உண்மையில் அங்கு நடந்தது என்பதை அறிவதில் கூட அக்கறை காட்டவில்லை. 55 மனித உயிர்கள் இழப்புக்கு என்ன காரணம்? பலிகடா ஆக்கப்பட்ட அதிகாரிகள் தான் காரணமா? இல்லை அதன் பின்னணியில் ஆளும் கட்சியின் கரங்கள் இருக்கின்றனவா என்பதை மற்ற கட்சியினர் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதும் செயல்படும் இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்கள் இருந்தும்  குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக இருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு வித்தியாசமான பார்வையாகவே பார்க்கப்படுகிறது.

Kallakurichy news, Kallakurichy latest news, Cm Stalin and allied party leadersசமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு  பெரும்பான்மையான வெற்றியை தமிழக வாக்காளர்கள் அள்ளிக்கொடுத்து இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மக்களுக்கும் அப்படி அள்ளி வழங்கியதில் பங்கு உண்டு. ஆனால் இன்று அவர்களுக்கு ஒரு சோகம் ஏற்பட்ட போது ஆளும் கட்சியை சேர்ந்த  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  அவர்களது கூட்டணி கட்சித் தலைவர்கள் இதுவரை அங்கு செல்லாதது அவர்கள் மனதில் நீங்காத ஒரு குறையை ஏற்படுத்தி இருக்கிறது.

Kallakurichy news, Kallakurichy latest news, Cm Stalin and allied party leadersஅதிமுக,  பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்கள். புதிதாக அரசியல் களத்தில் குதித்து உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் கூட பாதிக்கப்பட்ட மக்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி இருக்கிறார். ஆளுங்கட்சி செல்லவில்லை என்றால் அது அவர்களது சொந்த விவகாரம். ஆனால் ஆளும் கட்சி தலைவர் கோபித்துக்கொள்வாரோ என அதன் கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் நலனில் அவர்களுக்கு எந்த அக்கறையும் எல்லை என்பதையே காட்டுகிறது.

Tags:    

Similar News