பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 492 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.23) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,348 கன அடியிலிருந்து 492 கன அடியாக சரிந்தது.

Update: 2024-06-23 03:45 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும் மோயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. 

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.  நேற்று (ஜூன்.22) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,348 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.23) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 492 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 58.23 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 58.37 அடியாக உயர்ந்தது. அப்போது, அணையில் நீர் இருப்பு 6.74 டிஎம்சியாக இருந்தது.

Tags:    

Similar News