திண்டுக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தின ஊர்வலம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-12-03 04:15 GMT

திண்டுக்கல்லில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தின ஊர்வலம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலகின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை , மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, “கையெழுத்து இயக்கம் மற்றும் ஆட்டோவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அதன் பிறகு, மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை இயக்குனர் (காசநோய் ) மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலுவலர் மரு.சந்தரிப்பிரியா வரவேற்புரையாற்றி நிகழ்வினை தொடங்கி வைத்தார். ​மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.சு.சுகந்தி ராஜகுமாரி கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எச்.ஐ.வி /எய்ட்ஸ் தொற்று இல்லாத மற்றும் புறக்கணித்தல் இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி தலைமையுரையாற்றினார்.

இதனை வழியுறுத்தும் வகையில், அனைவரும் இணைந்து “உறுதி மொழி" எடுத்துக் கொண்டனர். இக்கருத்தரங்கில், எய்ட்ஸ் கட்டுபாட்டு பணியில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதலும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.வீரமணி, துணை இயக்குனர் (குடும்ப நலம்) மரு.கௌசல்யா தேவி, நிலைய மருத்துவ அலுவலர் மரு.புவனேஸ்வரி, என்.ஹெச்.எம். ஒருங்கிணப்பாளர் மரு.நாகஜோதி, மருத்துவ அலுவலர்கள் மரு.ரம்யா, மரு.செந்தில்குமார், செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் சேக்தாவுத், எச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எய்ட்ஸ் கட்டுபாட்டு மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா நன்றியுரை ஆற்றினார். கருத்தரங்கு நிகழ்வுகளை, ஆற்றுனர் கண்ணன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியாக, அனைவரும் கலந்து கொண்ட “சமபந்தி போஜனம்” நடைபெற்றது.

Tags:    

Similar News