முதன்மை கல்வி அதிகாரி வரத்தாமதம் : பொதுமக்கள் காந்தி சிலையிடம் மனு அளிப்பு

மனுவைப்பெற காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி உருவச்சிலையிடம் மனு அளித்தனர்

Update: 2022-01-25 12:38 GMT

கல்வி அலுவலகம் முன்பாக உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலையிடம் மனுவை ஒப்படைத்து  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொள்ள நான்கு மணி நேரம் தாமதம் காட்டிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி. ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வி அலுவலகம் முன்பாக உள்ள மகாத்மா காந்தி  உருவச்சிலையிடம் மனுவை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூதிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டிடம் கட்டுவதில் ஆசிரியர்கள் முறைகேடு செய்துள்ளதாகவும், இதேபோல் நாககோனூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் ராதா ராணியை விரியம்பட்டி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை ஆகியோரின் நடத்தை  தொடர்பாக   பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து  அந்த இரண்டு  பேர் மீதும்  நடவடிக்கை எடுக்க வேடசந்தூர் கல்வி அதிகாரியிடம்  அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்து நடவடிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று திண்டுக்கல் மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி கருப்புச்சாமி யிடம் மனு கொடுப்பதற்காக நான்கு மணி நேரம் காத்திருந்தனர். 

பொதுமக்களின் மனுவை  வாங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இருக்கக்கூடிய மகாத்மா காந்தியின் உருவ சிலையிடம், தாங்கள் கொண்டு வந்த மனுவை ஒப்படைத்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த மனு மீது மகாத்மா காந்தி நடவடிக்கை எடுக்கட்டும் என கூறி காந்திசிலையின் காலடியிலேயே தங்கள் மனுவை வைத்து விட்டு சென்றனர்.இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News