வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-27 13:25 GMT

திண்டுக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்  பூங்கொடி திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நத்தம் ,ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய  ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 40 ஆயிரத்து 831 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 95 ஆயிரத்து 483 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 45 ஆயிரத்து 135 பேரும், இதர வகுப்பை சேர்ந்தவர்கள் 213 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 49 ஆயிரத்து 652 பேர் கூடுதலாக உள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்தம் 219 வாக்குச்சாவடிகள் உள்ளது.

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது 

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்.பி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் புறநகர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஒரு வீட்டில் ஜீவானந்தம்(வயது37). என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு ஜீவானந்தத்தை கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து, தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கருப்பன்மூப்பன்பட்டி பகுதியை சேர்ந்த உமா(24) என்ற பெண் குடும்ப பிரச்சனை காரணமாக சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, வத்தலகுண்டு போலீசார் விசாரணைநடத்தினர்.திருமணம் ஆகி 2  ஆண்டுகள் ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ .மேல் விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News