கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Tamil Nadu Colleges News - கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்திய கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பிசிபஸ்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Update: 2022-07-23 06:43 GMT

 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட கல்லூரி முதல்வர் பழனியம்மாள் மற்றும் பிசிபஸ்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனர் மஹராஜ் ஆகியோர்.

Tamil Nadu Colleges News -கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பிசிபஸ்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்.பழனியம்மாள் மற்றும் பிசிபஸ்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மஹராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விருந்தினர் விரிவுரைகள்(Guest Lecture), கருத்தரங்குகள் (seminars), சமீபத்திய தொழில்நுட்பம் சார்ந்த அறிவு பரிமாற்றம்(Recent Advanced Technology sharing), மற்றும் பயிற்சி பட்டறைகள்(work shop) போன்ற நிகழ்வுகளை மாணவ,மாணவிகளுக்கும் , ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பயன் பெறுவர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் முனைவர் ஸ்ரீஜித் விக்னேஷ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் முனைவர் சித்ரா, கம்ப்யூட்டர் டெக்னாலஜி துறை தலைவர் சீமா தேவ் அக்ஷதா, கம்ப்யூட்டர் பயன்பாடு, டேட்டா சயின்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் துறை தலைவர் முனைவர்.கீதா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் சந்தியா, வினோத், வசுமதி, நவீன்குமார், மாலதி, கோபி, கணேசமூர்த்தி மற்றும் கனிமொழி உடன் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News