பொது மக்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்திய புளியந்தோப்பு சரக போலீசார்

புளியந்தோப்பு சரக போலீசார் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Update: 2021-12-12 13:30 GMT

புளியந்தோப்பு போலீசார் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

பொதுமக்களிடம் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு குறைந்து மீண்டும் பொதுமக்கள மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர்கள் டம்பலர்கள் மற்றும் இதர பொருட்கள் என  பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது இதனை களைய தற்போது மீண்டும் அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புளியந்தோப்பு சரகத்தில் உள்ள 9 காவல் நிலையங்களும் சேர்ந்து நேற்று மாலை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர்

 ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி ஸ்டரான்ஸ் ரோடு. புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் காவலர்கள் தங்கள் சைக்கிள்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்  குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக்கொண்டு தற்போது பெய்த கனமழையின் காரணமாக பொது மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது குறித்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பாதகைகளை போலீசார் ஏந்தி சென்றனர்.

Tags:    

Similar News