அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி..!
சோழவரம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார்.;
சோழவரத்தில் உள்ள இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர். சுதர்சனம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சோழவரம் அரசு ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி இரண்டு பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு துணை பெரும் தலைவருமான கருணாகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் லீலாவதி, மகேஸ்வரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சிவா, வழக்கறிஞர் டிசைன் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதாவரம் சுதர்சனம் கலந்துகொண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலுகின்ற 96 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 63 மாணவிகளுக்கும் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது,
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வருவதாகவும், வெகு தூரத்திலிருந்து மாணவர்கள் படிப்பதற்கு பள்ளிக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் சிலர் மாணவர்களின் கல்வி பாதியிலேயே தடைபட்டு நின்றுவிடக்கூடாது. எனவே அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இது மட்டுமல்லாமல் நம் முதல்வர் ஏழை மாணவர்கள் பட்டினி பசியுடன் பள்ளிக்கு வந்து கல்வி பயிலக் கூடாது என்று பசியில் அவர்கள் படிப்பானது தடை படக் கூடாது என்று பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தாயுள்ளத்தோடு சிந்தித்து காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்தார்.
இது மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள் அவர்களின் மேல் படிப்பு தொடர மாதம் 1000. ரூபாய் வழங்கப்படுகிறது. நம் முதல்வர் செய்யும் சாதனைகள் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் சுகவேணி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனீஸ்வரன், அரசு வழக்கறிஞர் முகிலன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.