மாதவரம் அருகே கண்ணபிரான் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
மாதவரம் அருகே இராதா ருக்மணி சமேத அபயவரதபெருமாள் ஸ்ரீ கண்ணபிரான் திருக்கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ இராதாருக்மணி சமேத அபயவரத பெருமாள் ஸ்ரீ கண்ணபிரான் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு மகளிர் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுவாமிக்கு அதிகாலை பால், சந்தனம், தயிர், இளநீர், தேன், ஜவ்வாது, குங்குமம்,மஞ்சள்,திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மகளிர் குழுவினர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு உலக மக்கள் நன்மை வேண்டி, நோய் நொடி இன்றி வாழவும் சிறப்பு வழிபாடு திருவிளக்கை ஏற்றி வைத்த குங்குமம்,மஞ்சள், பூக்களால் அர்ச்சனை செய்தனர்.
நிகழ்ச்சிக்கு ஆலய அனைத்துநிலை பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பக்தர்கள் உள்ளிட்ட கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுமக்களும் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர்.