ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா

நாரவாரிகுப்பம் பகுதியில் வேணுகோபால சுவாமி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்;

Update: 2024-10-19 05:45 GMT

அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி.

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் வேணுகோபால சாமி கோவிலில் புரட்டாசி மாத திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆலயத்தில் 124-ம் ஆண்டு புரட்டாசி மாத திருவிழா ஆலய அனைத்துநிலை நிர்வாகிகள் மற்றும் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கணபதி ஹோமத்துடன் மூலவருக்கு சீர்வரிசையுடன் பால்குடம் எடுத்துவந்து பால் மற்றும் தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஊஞ்சல் உற்சவம், ஆன்மீக சொற்பொழிவுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு சாம் கார்த்திக் மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் திரைப்பட இன்னிசை கச்சேரி நிகழ்ச்சினை பேரூராட்சி தலைவர் தமிழரசிகுமார், கவுன்சிலர் தெய்வானை கபிலன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.

மேலும் ஆலயம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது.

Tags:    

Similar News