14.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்..!
மாதவரம் அருகே பாண்டேஸ்வரத்தில் 14.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆவடி சாமு நாசர் வழங்கினார்.
பாண்டேஸ்வரத்தில்496 பயனாளிகளுக்கு ரூ. 14.53 கோடி மதிப்பீலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி பாண்டேஸ்வரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்துகொண்டு 496 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக ரூ.14.53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், இணை இயக்குனர் வேளாண்மை முருகன், ஆவடி வட்டாட்சியர் சசிகலா, வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மோரை கோ.தயாளன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாண்டேஸ்வரம் ரேகாராமன், மோரை திவாகர், அரக்கம்பாக்கம் கோவிந்தராஜ், ஒன்றியக் கவுன்சிலர் குணாதயாநிதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.