சென்னை மாநகராட்சி 31-வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா

பெருநகர சென்னை மாநகராட்சி 31-வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பங்கேற்றார்.

Update: 2024-10-21 06:30 GMT

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்.

சென்னை மாநகராட்சி 31-வது வார்டில் புதிய நியாயவிலை கடை திறப்பு விழா நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி 31-வது வார்டு, புழல் அடுத்த கதிர்வேட்டில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை திறப்பு விழா மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் நடைபெற்றது.

சமூக சேவகரும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவருமான பாபு அனைவரையும் வரவேற்றார். துணை பதிவாளர் கமலக்கண்ணன், உதவி ஆணையர் இளவரசன், பொது மேலாளர் நீதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நியாயவிலை கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

வாரந்தோறும் சனிக்கிழமை வழங்கி வரும் காலை உணவை தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு வழங்கினார்.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்.எம். தாஸ், ஏ.ஜி. சிதம்பரம், லயன் டி.ரமேஷ், புழல் குபேந்திரன், ஆர்.ஆர். சாந்தகுமார், சந்திரசேகர், தர்ஷன், ஸ்ரீகரன், வழக்கறிஞர் கோட்டூர் உதயா, புழல் மதன்குமார், ஆவடி பாபுராம் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News