செங்குன்றம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!
செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு.;
செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றம் அருகே உள்ள செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்கப்படுகிறதா? என்பது குறித்து செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவுக்காக வந்தவர்களை வெளியேற்றிவிட்டு கதவுகளை அடைத்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சார்பதிவாளர் மற்றும் ஊழியர்கள் இடம் விசாரனையுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் நடந்துவருகின்றன. பல பதிவாளர் அலுவலகங்களில் பலர் பரிசுகள் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.