குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு..!
செங்குன்றம் அருகே குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரத்தை (நவம்பர் 18 முதல் நவம்பர் 24 வரை) முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி,புழல் ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சியில் மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ். சுதர்சனம் வழிகாட்டுதலின்படி புள்ளிலையன் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் ஏற்பாட்டில் புதுநகரில் உள்ள நேஷனல் லோட்டஸ் பள்ளியில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு, கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் செயல்பாடுகள், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளுக்கான உதவி மைய எண் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், மாவட்டப் பயிற்றுநர் வேல்விழி மற்றும் ஹேண்டு இன் ஹேண்டு தொண்டு நிறுவன அலுவலர் லதா ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், சமூக ஆர்வலரும் கழக மாவட்டப் பிரதிநிதியுமான புள்ளிலையன் ரமேஷ், துணைத்தலைவர் மாதவன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மக்கள் நலப்பணியாளர் ஜெயந்தி, ஊராட்சிப் பணியாளர்கள் பார்த்திபன், நாகஜோதி, சூர்யா, சுதா, ஆகியோர் கலந்துகொண்டனர்.