புழல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை! 4 பேர் கைது!
புழல் அருகே 4பேர் கொண்ட கும்பல் வாலிபரை வெட்டி படுகொலை செய்து போலீசில் சரண். பரபரப்பு.
புழல் அருகே தங்கை மரணத்திற்கு காரணமான வாலிபர் அண்ணன் நண்பர்களுடன் இணைந்து வெட்டிக்கொலை 4 பேர் சரணடைந்தது பரபரப்பு
சென்னை: கொளத்தூர் ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த அவிநாஷ் என்கின்ற இமானுவேல் (வயது 19) புழல் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பருதி (வயது 20) மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ் குமார் (வயது 21), சூர்யா (வயது 23), லோகேஷ் (21) ஆகிய நான்கு பேரும் புழல் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில், இளம்பருதி தன்னுடைய தங்கை ஜெயபாரதி பள்ளி படிப்பு படித்தபோது அவிநாஷ் காதலித்து வந்ததாகவும், இதனால் தங்கையின் படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக அவரை சோழவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் அனுப்பி பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்து வந்ததாகவும் தெரிவித்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் விடுமுறை விடப்பட்டதால் தங்கை ஜெயபாரதியை தன்னுடைய தந்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு புழலில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரும்பொழுது விபத்து ஏற்பட்டு தங்கை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இந்த விபத்தில் தன்னுடைய தந்தைக்கு இரண்டு கால்கள் பறிபோனதால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் இளம்பருதி வாக்குமூலம் அளித்தார்.
இவ்வளவுக்கும் காரணம் அவிநாஷ் செய்த காதல் தான் தன் குடும்பத்தை சின்னா பின்னம் ஆக்கியதாகவும், எனவே எப்படியாவது அவிநாஷ்யை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டி நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக இளம்பரிதி கூறினார். இதனைத்தொடர்ந்து இளம்பருதி, சந்தோஷ்குமார், சூர்யா, லோகேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட அவிநாஷ், இளம்பருதியின் தங்கை ஜெயபாரதியின் காதலன்.
ஜெயபாரதி பள்ளி படிப்பு படித்தபோது அவிநாஷ் காதலித்து வந்ததாகவும், இதனால் தங்கையின் படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக இளம்பருதி தன் தங்கையை சோழவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் அனுப்பி பள்ளி சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் விடுமுறை விடப்பட்டதால் தங்கை ஜெயபாரதியை தன்னுடைய தந்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு புழலில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரும்பொழுது விபத்து ஏற்பட்டு தங்கை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இந்த விபத்தில் தன்னுடைய தந்தைக்கு இரண்டு கால்கள் பறிபோனதால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், அவினாஷ் செய்த காதல்தான் தங்கள் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.