தினம் ஒரு திருமுறை-மறை - 2 பதிகம் - 2 பாடல் - 4

Thirumurai Pathigam-தினம் ஒரு திருமுறை-மறை - 2 பதிகம் - 2 பாடல் - 4

Update: 2021-08-01 00:38 GMT

Thirumurai Pathigam-தினம் ஒரு திருமுறை

மறை - 2 பதிகம் - 2 பாடல் - 4

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்

பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்

சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்

காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே

விளக்கவுரை

பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால் அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம் கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், திங்களும் பாம்பும் தங்கிய செஞ்சடையுடையவராய் எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ? சொல்வீராக.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News