பிறந்த தேதி அடிப்படையில் உங்கள் வருங்கால ஜோடியை தேர்வு செய்வது எப்படி..? பார்க்கலாம் வாங்க..!

Marriage Porutham with Date of Birth-பிறந்த தேதியின் அடிப்படையில் திருமணம் செய்யும் ஜோடிக்கு தமிழில் துல்லியமான திருமணப் பொருத்தம் பார்க்கலாம்.

Update: 2022-12-19 08:21 GMT

திருமண பொருத்தம் (கோப்பு படம்)

Marriage Porutham with Date of Birth

பிறந்த தேதியின் அடிப்படையில் திருமணம் செய்யும் ஜோடிக்கு தமிழில் துல்லியமான திருமணப் பொருத்தம் பார்க்கலாம்.

Marriage Porutham with Date of Birth

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். காரணம் அவர்கள் சந்தோஷமான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக. ஆனால், திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க. இந்து புராணங்களின்படி, திருமண ஏற்பாடு சொர்க்கத்தில் உள்ள கடவுளால் தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. பொதுவாக, தமிழில் ஜாதகப் பொருத்தம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ மணமகன் ஜாதகத்துடன் மணப்பெண் ஜாதகம் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த ஆய்வு செய்து கணக்கிடப்பட்டு கணிக்கப்படுவதாகும்.

மணமகள் மற்றும் மணமகன் பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு திருமணப் பொருத்தக் கணக்கீட்டைச் சரிபார்க்க ஆன்லைன் வழியாக தமிழ் தட்டச்சு எளிதான வழியை வழங்குகிறது. தற்போது எண்ணற்ற ஆன்லைன் இலவச ஜாதக வெப்சைட்டுகள் உள்ளன.

நமது கலாச்சாரம் மற்றும் சமூகம் எந்த ஒரு திருமணத்திற்கும் முன் ஜாதக பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. திருமண ஏற்பாட்டிற்கு வரும்போது, ​​மிக முக்கியமான மற்றும் முதல் படி மணமகன் மற்றும் மணமகனின் ஜாதகப் பொருத்தத்தை சரிபார்ப்பதே.

திருமணப் பொருத்தம் என்பது ஜென்ம நட்சத்திரம் (பிறந்த நட்சத்திரம்) மற்றும் ஜென்ம ராசி ஆகியவற்றை ஒப்பிடுவதன் மூலம் தொடங்குகிறது. திருமணப் பொருத்தம் என்று வரும்போது, ​​10 முக்கியமான புள்ளிகளை சரிபார்க்க வேண்டும். பொருந்தக்கூடிய நிலைகள் (பொருத்தம்) அடிப்படையில் உத்தமம், மத்யம் மற்றும் அதமம் என குறிப்பிடப்படுகின்றன.

பொதுவான பொருத்தங்கள், தின பொருத்தம், கண பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம்,ராசி அதிபதி பொருத்தம்,ரச்சு பொருத்தம், வேத பொருத்தம், வசிய பொருத்தம்,மகேந்திர பொருத்தம் ஆகிய 10 பொருத்தங்களில் பெரும்பாலும் 8 பொருத்தம் இருந்தால் போதும் என்பது வழக்கம்.

தசவிதப் பொருத்தங்கள்:

தினப் பொருத்தம்: தினப் பொருத்தத்தை நட்சத்திரப் பொருத்தம் என்றும் கூறலாம்.

கணப் பொருத்தம்: இது கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை பற்றிக் கூறும் பொருத்தம்.

மகேந்திரப் பொருத்தம்: இது புத்திர பாக்கியம் பற்றிக் கூறும் பொருத்தம்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்: தன, தான்ய விருத்தி பற்றிக் கூறும் பொருத்தம்.

யோனிப் பொருத்தம்: கணவன் மனைவி இல்லற வாழ்வைப் பற்றிக் கூறும் பொருத்தம்.

இராசிப் பொருத்தம்: இரு குடும்பங்களின் உறவுமுறை பற்றி கூறும் பொருத்தம்.

இராசி அதிபதி பொருத்தம்: கணவன் மனைவி புரிந்துணர்வு பற்றிக் கூறும் பொருத்தம்.

வசியப் பொருத்தம்: ஒருவர் மீது ஒருவர் அன்பு மாறாமல் பிறர் மீதான நாட்டம் இல்லாமல் இருப்பது பற்றிக் கூறும் பொருத்தம்.

ரஜ்ஜுப் பொருத்தம்: கணவன் மனைவி ஆயுள் பற்றிக் கூறும் பொருத்தம்.

வேதைப் பொருத்தம்: இன்பத்திலும் துன்பத்திலும் அனுசரித்து நடந்து கொள்வது பற்றிக் கூறும் பொருத்தம்.

இந்தப்பொருத்தங்கள் சரியாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தற்காலத்தில் 10 பொருத்தத்தில் 7 பொருத்தங்கள் இருந்தாலே திருமணம் செய்கிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News