தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி? 3

Muttai Kulambu Eppadi Seivathu-தக்காளி இல்லாமல் செய்யும் குழம்பு வகைகள் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் குழம்பு முட்டை கிரேவி.

Update: 2023-07-04 10:30 GMT

Muttai Kulambu Eppadi Seivathu

Muttai Kulambu Eppadi Seivathu-தக்காளி இல்லாமல் செய்யும் குழம்பு வகைகளைப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இப்போது நாம் காண இருப்பது முட்டை கிரேவி. தக்காளி இல்லாமல் முட்டை கிரேவி கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும் ஆனால் சுவையாக இருக்கும். தக்காளி விலை அதிகமாக இருப்பதால் அது இல்லாமலோ அல்லது பெயரளவுக்கு கொஞ்சம் சேர்த்தோ இந்த முட்டைக் கிரேவி செய்ய முடியும். வாருங்கள் எப்படி செய்வதென்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை - 4

மிளகாய் தூள் - 1 கரண்டி

மஞ்சள் தூள் - 1 கரண்டி

மல்லி தூள் - 1 கரண்டி

சீரக தூள் - 1 கரண்டி

உப்பு - சிறிதளவு

வெங்காயம் - சிறிதளவு

எண்ணெய் - தேவைக்கேற்ப

தயிர் - 1 1/2 கப்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை

அடுப்பை பற்ற வைத்துக் கொண்டு அதில் பாத்திரத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.

அதில் கொஞ்சம் உப்பு , மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, ஏற்கனவே வேக வைத்து எடுத்துள்ள முட்டையை ஓட்டை உடைத்து இரண்டாக கீறி போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதனை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அதே பாத்திரத்தில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அதில் சிறிதளவு வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பின் ஒரு கரண்டி அளவுக்கு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் எடுத்துக்கொண்ட 1 1/2 கப் தயிரை இந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள். கொளுகொளுவென்று இருப்பது வேண்டாம் என்றால் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு தட்டுபோட்டு மூடி விடுங்கள். 5 முதல் 7 நிமிடங்கள் வரை அடுப்பைக் கூட்டி வைத்து வேக விடுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்துவரும். அப்போது முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News