summer foods to avoid-கோடை காலத்தில் இதையெல்லாம் சாப்பிடாதீங்க..! ஆரோக்யம் முக்கியமுங்க..!

summer foods to avoid-கோடை காலத்தில் வெப்பம் அதிகமாவதால், அந்த வெப்பத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்கமும் இருப்பது நமது உடல் ஆரோக்யத்தைக் காக்க உதவும்.

Update: 2023-05-15 06:57 GMT

summer foods to avoid-கோடையில் தவிர்க்கவேண்டிய உணவுகள்.(கோப்பு படம்)

கோடை காலத்தில் பொதுவாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். அதேபோலவே நமது உடலின் வெப்பமும் சாதாரண நாட்களைவிட அதிகமாக இருக்கும். ஆகவே, கோடை காலத்தில் நாம் சில உணவு வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

summer foods to avoid


கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.

பொதுவாகவே கோடை காலம் வந்து விட்டாலே நாம் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது பாதுகாப்பானதாகும். ஏனெனில் உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகரித்து காணப்படும். இது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.


எனவே, நாம் சாப்பிடும் உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை வெளியில் அதாவது கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது என்று பார்க்கலாம் வாங்க.

summer foods to avoid


கோடையில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

வெயில் அதிகமான கோடையில் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது

பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை,மசாலா பொருட்கள் இது போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

எண்ணெயில் பொரித்த அல்லது எண்ணெயில் தயாரித்த பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


காபி, தேநீர் அடிக்கடி குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்

சர்க்கரை மற்றும் கிரீம் அதிகமுள்ள இனிப்பு பண்டங்கள், பலகாரங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது

குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை விடவேண்டும்.

summer foods to avoid


வெயில் காலத்தில் கத்திரிக்காய், கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை அடிக்கடி உண்பதை தவிர்க்க வேண்டும்.

பயிறு, எள்ளு, ராகி, அதிக மைதா உணவுகள், வேர்க்கடலை,கோதுமை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம்.

அன்றாடம் நாம் சாப்பிடும் பால் பொருட்களான சீஸ், பால், தயிர் போன்றவை உடல் வெப்பத்தை அதிரிக்கும் தன்மை கொண்டவை. எனவே, இவற்றை கோடைகாலத்தில் குறைத்துக்கொள்வது நல்லது.


கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் உடற் சூட்டைக் கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கிவிடலாம். இதனால் உடலிலிருந்து நீர்ச்சத்து வெளியேறிவிடும் வாய்ப்புள்ளது.

summer foods to avoid


உலர் பழங்கள் மிகவும் ஆரோக்யமானவை தான்; ஆனால், அது உடற்சூட்டை அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டது. அதனால், உலர் பழங்களை கோடை காலத்தில் அளவாக சாப்பிடுவது நல்லது.


சாலையோர கடைகளில் விற்கப்படும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவு வகைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தியாகவேண்டும்.

கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

நம்ம உடல் ஆரோக்யம் சீராக இருக்கவேண்டும் என்றால் கோடைகாலம் முடியும் வரையிலாவது கொஞ்சம் வாய்ய்யய்க்கட்டி 

Tags:    

Similar News