பாக்கெட்டில் விற்கப்படும் இஞ்சி- பூண்டு பேஸ்ட் பயன்படுத்தாதீங்க.

Ginger Garlic Paste -கடைகளில் பாக்கெட்டில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்தினால் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என தெரியவந்துள்ளது.

Update: 2023-01-23 04:20 GMT

Ginger Garlic Paste -சமையல் நேரத்தை மிச்சப்படுத்தும் என ரெடிமேடாக கிடைக்கும் சமையல் பொருட்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் முக்கியமானது இஞ்சி பூண்டு பேஸ்ட்.

முன்பெல்லாம் இஞ்சி பூண்டு விழுது வீட்டிலேயே அரைத்து சமையலுக்கு உபயோகிப்பர். அது சமையலுக்கு ருசியை கூட்டுவதுடன் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் தற்போதயெல்லாம் பல நாட்களாக பாக்கெட்டில் அடைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதையே பயன்படுத்துகின்றனர். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று அவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

வயிற்று புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து போது அந்த கட்டியில் பியூரிடான் எனப்படும் குருணை மருந்தின் வேதியியல் கூறுகள் இருந்தன . இது இஞ்சி பயன்படுத்தும் விவசாயிகள் அவர்கள் நிலத்திற்கு பயன்படுத்தும் ஒரு பொருள்.

பியூரிடான் எனப்படும் மருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர். இவை மண்ணில் கரையும் தன்மை மிக குறைவு. இவை முழுவதும் மண்ணில் கரைய கிட்டதட்ட ஐந்து வருடங்கள் ஆகும். இஞ்சியின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று நஞ்சாகிறது.

இஞ்சி மற்றும் சுக்கு இவற்றை தோல் நீக்கித்தான் பயன்படுத்த வேண்டும் என சித்த மருத்துவம் கூறுகிறது. ஏனெனில் அவற்றில் தோலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் இருக்கும். நம் வீட்டில் உபயோகிக்கும் இஞ்சி மட்டும்தான் தோல் சீவி பயன்படுத்துகிறோம். கடைகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பசைகளில் இஞ்சியின் தோல் சரிவர நீக்கபடுவது இல்லை. இஞ்சியானது வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால், ஜீரண மண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது. மற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவது. இவற்றை "உணவே மருந்தாக" உட்கொள்ளும் நாம் கலப்பட நஞ்சான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணரருங்கள்.


இஞ்சியின் விலை, பூண்டின் விலை ஆகியவற்றை மதிப்பீடு செய்யுங்கள். மார்க்கெட்டில் கிடைக்கும் இஞ்சி- பூண்டின் விலையை ஒப்பிடும் போது, அதனை சுத்தம் செய்து, அரைத்து பாக்கெட்டில் அதனை அடைத்து இவ்வளவு குறைந்த விலைக்கெல்லாம் விற்க முடியாது. பாக்கெட்டில் கொடுக்கக்கூடிய இஞ்சி பூண்டு பேஸ்ட் 40 சதவீதம் கூட அதில் இஞ்சி பூண்டு இருப்பதில்லை.

அப்போது ஏதோ கலப்படம் நடக்கிறது. ஏதோ தவறு நடக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை குறைவாக கிடைக்கிறதே என்பதற்காக வாங்கி பயன்படுத்தி விட்டு, உங்கள் உடம்புக்கும், உங்கள் குழந்தைகள், குடும்பத்தினர் உடலுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தி விடாதீர்கள்.

குறிப்பாக இது பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய விலை மதிப்பு மிகுந்த செய்தி ஆகும். ஆரோக்கியம் என்பது குடும்ப பெண்களின் கையில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News