திருப்பதியில் ரூ.350 கோடியில் நவீன ரயில் நிலையம்

காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

Update: 2022-06-01 05:48 GMT

இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தை, 350 கோடி ரூபாயில், மூன்று மாடிகளுடன், சர்வதேச வசதிகளுடன் தரம் உயர்த்தும் வகையில், கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சர்வதேச வசதிகளுடன், 350 கோடி ரூபாயில் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார். இந்திய ரயில்வே தனியார் பங்களிப்போடு, 53 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 14 ரயில் நிலையங்களை, 5,000 கோடி ரூபாயில் மேம்படுத்த உள்ளது. இதில், சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், திருப்பதி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் அடங்கும்.

திருப்பதி நிலையத்தில், 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமிரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.இதற்கான மாதிரி போட்டோக்களை, அஸ்வினி வைஷ்ணவ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Similar News