சிபிஎஸ்இ 10th, +2 முதல்கட்ட பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

முதல்கட்ட தேர்வுகளை இணையவழியில் இல்லாமல் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்கள் எழுதவுள்ளனர்.

Update: 2021-10-19 04:36 GMT

சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் - காட்சி படம் 

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான முதல் கட்ட பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதல்முறையாக 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி முதலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதலும் பிரதான பாடங்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதர பாடங்களுக்கான தேர்வை 10-ஆம் வகுப்பு மாணவர்கள் நவம்பர் 17-ஆம் தேதி முதலும், பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் நவம்பர் 16-ஆம் தேதி முதலும் எழுதவுள்ளனர்.

முதல்கட்ட தேர்வுகளை இணையவழியில் இல்லாமல் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்கள் எழுதவுள்ளனர். வழக்கமாக காலை 10.30 மணிக்குத் தொடங்கும் தேர்வுகள், இந்த முறை காலை 11.30 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் நடைபெறவுள்ளன. தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் தங்கள் சொந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதவுள்ளனர். இரண்டாம் கட்ட தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News